இளம் கன்று பயம் அறியாது என்பதை நிஜமாக்கிய சிறுவன்,பல புலவர்களால் போற்றப்பட்ட ஒருவன்,2 பேரரசர்கள் மற்றும் 5 குறுநில மன்னர்களை தனி ஒருவனாய் வென்றவன்-
"தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்"!!!!!
இது புனையப்பட்ட கற்பனை கதை அல்ல கல்வெட்டு கதை சொல்லும் நம் மறைந்த வரலாற்றின் உண்மை!!!!
கடைச்சங்க கால பாண்டிய மன்னனான "சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்" அகால மரணம் அடைந்தார்.சிம்மாசனம் வெறுமையாக நின்றது…
மக்கள் பயத்தால் நடுங்கினர்…அரசர் இல்லாத நாடு – இரவுக்கு முன்பே கல்லறை ஆகிவிடும்! இருட்டை வெட்டிய ஒளியாக…அரண்மனையில் ஒரு சிறுவன் மன்னனாக முடிசூடினான்! தன் தந்தையின் வழியில்,பாண்டிய நாட்டை காக்க மன்னனாக அவதரித்த அவன் – நெடுஞ்செழியன்!
பாண்டிய மன்னன் இறந்த செய்தி அறிந்து,பாண்டிய நாட்டை கைப்பற்ற இதுவே தக்க சமயம் என்று கருதிய சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி , சேரமான் யானைக்கட்செய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, வேளிர் மன்னர்கள்- திதியன், எழினி, எருமையூரன். இருங்கோவேண்மான், பொருநன் ஆகிய 7 பேரும் பெரும் படையை திரட்டிக்கொண்டு மதுரை மாநகரை முற்றுகையிட்டனர்!
நெடுஞ்செழியன் முதன்முதலாக,தலையில் வேப்பம்பூ அணிந்து கையில் வில் ஏந்தி , அணிவகுத்து நின்ற தனது பாண்டிய படைக்கு தலைமை வகித்து நின்றான்.
இதைக்கண்ட 7 மன்னர்களும்,"இவன் இளம் சிறுவன்…போர்க்களத்தையே அறியாதவன்… இவன் என்ன செய்ய முடியும்?" என்று இகழ்ந்து கூறினர்.
ஆனால்... அதுதான் அவர்களின் மிகப்பெரிய தவறு! நெடுஞ்செழியன் – ஒரு சிறுவன் அல்ல! அவன் பிறப்பிலேயே அரசனாகப் பொறுத்தவன்!
"என்னை சிறுவன் என்று இகழ்ந்தவர்களுக்கு, போர்க்களமே பதிலளிக்கட்டும்!!!"
அவர்களை நான் வெற்றிபெறவில்லை என்றால்,என் நாட்டு மக்கள் என்னை "கொடுங்கோலன் !!"என்று பழி தூற்றட்டும்.என்னை புலவர்கள் புகழ வேண்டாம்.
என் மக்களுக்கு கோடை வழங்க முடியாமல் நான் வறுமையில் வாடட்டும் என்று சூளுரைத்தான்.
தன் படைகளுக்கு போர் முழக்கம் கொடுத்து, வீரச் செருக்குடன் களத்துக்குப் புறப்பட்டான் நெடுஞ்செழியன்!. அவனுடைய ஒற்றை முழக்கமே எதிரிகளை நடுங்க வைத்தது. தலையாலங்கானம் என்னும் இடத்தில் அந்த ஏழு அரசர்களும் நெடுஞ்செழியன் வேகத்திற்குத் தாங்காது நடுங்கினர். அவன் கடும் தாக்குதலுக்குப் பயந்து பின்வாங்கினர்.இதோடு விடாமல் நெடுநஞ்செழியன் அவர்களை உறையூர்,வஞ்சி ஆகிய அவர்களுடைய நாட்டிற்கே துரத்திச்சென்று பேரழிவை ஏற்படுத்தினான்.
இவன் சிறந்த வீரன் மட்டும் அல்ல சிறந்த தலைவனும் கூட...போரில் புண்பட்ட வீரர்களை இரவில் நேரில் சென்று பாராட்டி, உற்சாகம் நிரப்புவது இவ்வேந்தன் ஒருகணமும் தவறாத பணியாகக் கொண்டான்!எதிரிகளின் வீரத்தை முறியடித்து, பேரழிவை ஏற்படுத்தியவனாக, வெற்றியுடன் நெடுஞ்செழியன் -"தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்" எனப் பெயர் பெற்றான்.போரில் வென்ற செய்தியை மூன்றாம் இராசசிங்க பாண்டியனது சின்னமனூர்ச் செப்பேடுகளும்,பராந்தக பாண்டியனின் செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன.நெடுநஞ்செழியன் ஒரு மன்னன் மட்டுமல்ல, ஒரு புலவர் எனவும் அவர் தமிழ்ச் செம்மையை புறநானூற்றில் நிரூபித்தார்!
நெடுஞ்செழியனின் வீரம், தன்வழிக் காட்டிய திமிர், ஆட்சியின் ஆழம், போர்க்களத்திலே அவர் வீசிய மின்னல் ஆகிய அனைத்தையும் பத்துப்பாட்டில் மதுரைக் காஞ்சியும், எட்டுத்தொகையில் நெடுநல் வாடையும் புகழ்ந்து பாடி, தமிழ் நாட்டின் வரலாற்றில் தங்கக் களஞ்சியமாக மின்னுகின்றன!
இன்றும் பாண்டியர்களின் வீர காவியம் பேசப்படும் போதெல்லாம் –தலையாலங்கானத்து வெற்றி கூறப்படாமல் இருக்குமா?
## **Nedunchezhiyan – The Victor of Thalayalanganam**
During the late Sangam era, the Pandya king Nedunchezhiyan emerged as a beacon of courage and leadership at a tender age. Following the untimely demise of his father, King Nanmaaran, the Pandya kingdom stood vulnerable to invasions.
With seven powerful kings – including the Cholas, Cheras, and minor rulers – marching towards Madurai, the young Nedunchezhiyan fearlessly took command. At the battlefield of Thalayalanganam, he led his army to a historic victory, defeating all seven kings single-handedly.
His brilliant war strategies, compassion towards wounded soldiers, and unyielding dedication to his people cemented his place in Tamil history.
Praised in ancient Tamil literature like Purananuru and Madurai Kanchi, Nedunchezhiyan remains a symbol of valor and unwavering leadership, immortalized in the golden pages of Tamil heritage.